Sadhguru's Tamil Podcast show

Sadhguru's Tamil Podcast

Summary: Sadhguru, founder of Isha Foundation is a yogi, mystic and spiritual master with a difference. An arresting blend of profundity and pragmatism, his life and work serve as a reminder that inner sciences are not esoteric philosophies from an outdated past, but a contemporary science vitally relevant to our times.

Join Now to Subscribe to this Podcast
  • RSS
  • Artist: Sadhguru Tamil
  • Copyright: Copyright 2020 Sadhguru Tamil

Podcasts:

 சிதம்பரம் கோயிலின் ரகசியம் | Secret of Chidambaram temple | File Type: audio/mpeg | Duration: 320

தம் உடல்கூட மிஞ்சாமல், காற்றில் கரைந்த யோகிகள் பற்றிக் கேள்வி வர, அந்தக் கேள்விக்கான விடையோடு சிதம்பரம் நடராஜர் கோயிலின் விஞ்ஞான மகத்துவத்தையும் இந்த ஆடியோவில் எடுத்துரைக்கிறார் சத்குரு.

 How To Live As Yogi In Family Life? | குடும்பத்தில் இருந்தே யோகியாக வாழ்வது எப்படி? | File Type: audio/mpeg | Duration: 388

ஒருவர் ஆன்மீகப் பாதையில் நடையிடுவதற்கு குடும்பம் என்பது ஒரு தடையாகப் பார்க்கப்படுகின்ற ஒரு தவறான கண்ணோட்டம் உள்ளது. ஆனால், 15000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஆதியோகி சிவன், அப்போதே குடும்பம், குழந்தைகள், செல்லப்பிராணிகள் என முழுமையான கிரகஸ்த வாழ்க்கையில் இருந்துகொண்டு, ஆன்மீகத்தின் உச்சத்தில் திளைத்திருந்தார். இது எப்படி அவருக்கு சாத்தியமானது? கிரகஸ்த வாழ்க்கையில் இருந்துகொண்டே ஒருவர் யோகியாக செய்யவேண்டியது என்ன? ஆடியோவில் சத்குருவின் விடை!

 Is Luck Real? | அதிர்ஷ்டம் என்பது உண்மையா? | File Type: audio/mpeg | Duration: 286

தீவிர சாதனாக்கள் செய்த புத்தருக்கு ஏதோ ஒரு கணத்தில், அந்த போதி மர நிழலில் அதிர்ஷ்டமாய் ஞானம் கிட்டியது என்போர் உண்டு. எத்தனை எத்தனை சாதகம் செய்தாலும், ஜென்ம ஜென்மமாய் முயன்றாலும் ஞானத்திற்காக பாடுபடும் பலரும் உண்டு. இப்படி வாழ்வின் தினசரி விஷயங்களுக்கு மட்டுமல்லாமல், " அதிர்ஷடமிருப்பவர்களுக்கு மட்டும்தான் ஞானமா?" என எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்கள் கேட்ட கேள்விக்கு "அதிர்ஷடம்" என்பதன் செயல்பாட்டை இந்த ஆடியோவில் ஆணித்தரமாக விளக்குகிறார் சத்குரு.

 ஆன்மீகத்திற்கு அடிப்படை மரணமா?! - Death and Spiritual process | File Type: audio/mpeg | Duration: 252

முற்பிறவி பற்றியும் மரணத்திற்கு பிறகு உள்ள வாழ்க்கை பற்றியும் ஏராளமான விளக்கங்கள் நம்மிடையே உள்ளன. ஆனால், இன்னும் பலருக்கும் குழப்பங்கள் தீர்ந்ததாகத் தெரியவில்லை. எழுத்தாளர் திரு.நாஞ்சில் நாடன் அவர்கள் இது குறித்து சத்குருவிடம் கேட்டபோது, சத்குரு அளிக்கும் பதிலானது, ஆன்மீகத்திற்கு அடிப்படையாக இருப்பது மரணம் என்பதையும், புரியாத இந்த புதிர்களை புரிந்துகொள்வதற்கான வாய்ப்பையும் உணர்த்துகிறது.

 பெண்கள் ஏன் மெட்டி அணிய வேண்டும்? | Why Indian women wear toe rings? | File Type: audio/mpeg | Duration: 324

நமது கலாச்சாரத்தில் எந்த ஒரு பழக்கமும் காரணமில்லாமல் செய்யப்படவில்லை. ஆனால், இப்போது காரணத்தை மறந்துவிட்டு வெறும் பழக்கங்கள் மட்டும் சடங்குகளாக செய்யப்பட்டு வருகின்றன. அப்படியொரு பழக்கம்தான் கல்யாணம் செய்த பின் மெட்டியணிவது. இந்தப் பழக்கம் ஏன் வந்தது? சத்குருவின் விளக்கம் இந்த ஆடியோவில்!

 நம் கலாச்சாரத்தில் அரசன் பிச்சைக்காரனாக ஆவது ஏன்? - Why kings choose begging in our culture? | File Type: audio/mpeg | Duration: 387

நம் கலாச்சாரத்தில் கௌதம புத்தர், மஹாவீரர், பாஹுபலி போன்ற பலர் அரசனாக இருந்து பிச்சைக்காரனாக தன்னை மாற்றிக் கொண்டவர்கள். உணவு, உடை, உறைவிடம், செல்வம் என்று எந்தக் குறையும் இல்லாதவர்கள் தன்னை பிச்சைக்காரனாக மாற்றிக் கொண்டால் அதற்கு என்ன காரணம்? விளக்குகிறார் சத்குரு.

 கோபம் வந்தால் என்ன செய்யவேண்டும்? | When you get angry, what should you do? | File Type: audio/mpeg | Duration: 147

Sadhguru talks about anger and how to manage it. கோபமே வராத நிலையை எட்டுவதற்குதான் யோகாவெல்லாம் செய்கிறோம்! ஆனாலும் கோபம் வந்துவிடுகிறதே?! கோபம் வருகையில் நாம் செய்யவேண்டிதென்ன என்பதை சத்குரு இந்த ஆடியோவில் கூறுகிறார்!

 நந்தி காதில் பேசுவது சரியா? | Significance of Nandi (Bull) in Shiva Temples | File Type: audio/mpeg | Duration: 358

சிவன் கோயில்களில் நந்தி தேவன் எனப் போற்றப்படும் காளையின் ரூபம் அமர்ந்திருப்பதைப் பார்க்கலாம். இந்த காளைக்கும் சிவனுக்குமான வாழ்வியல் சார்ந்த தொடர்பு என்ன என்பதை எடுத்துக்கூறும் சத்குரு, நந்தி புரிந்துகொண்டுள்ள தன்மையை நாம் உணரவேண்டியதன் அவசியத்தையும் பேசுகிறார்.

 Why Sanyas? | சந்நியாசம் - ஒரு சுய'நலம் ! | File Type: audio/mpeg | Duration: 352

"சந்நியாசம்" - இந்த வார்த்தையைக் கேட்டவுடன் நம் மனபிம்பத்தில் வருவது, நீண்ட தலைமுடி, தாடி, காவி உடை அணிந்து, மெலிந்த தேகத்தோடு தேசாந்திரியாய் திரியும் மனிதர்தான். இப்படி நம் சமூகத்தில் சந்நியாசத்திற்கு ஒரு அடையாளத்தை நாமே உருவாக்கிக் கொண்டோம். ஆனால் சந்நியாசத்திற்கு இதையும் தாண்டிய ஒரு பரிமாணம் இருப்பது உங்களுக்கு தெரியுமா? அதைப்பற்றி சத்குரு இந்த ஆடியோவில் விளக்குகிறார்...

 Advice கொடுப்பது என் வேலை இல்லை! | File Type: audio/mpeg | Duration: 150

பொதுவாகவே இளைஞர்களுக்கு அட்வைஸ் கொடுத்தால் கடுப்பாகி விடுகின்றனர். இளைஞர்களுக்காக சத்குருவிடம் ஒரு அட்வைஸ் கொடுக்கச் சொல்லி கேட்டபோது, அவரின் பதில் என்னவாக இருந்தது என்பதை இந்த ஆடியோவில் கேளுங்கள்!

 Why should we worship the Panja boothas | ஏன் பஞ்ச பூதங்களை வணங்க வேண்டும்? | File Type: audio/mpeg | Duration: 435

பஞ்சபூதங்களை வணங்கினால் வாழ்க்கை மாறுமா? பஞ்சபூதங்களை எப்படி கையாள வேண்டும்? அவற்றை நாம் ஏன் வணங்க வேண்டும்? பஞ்சபூதங்களின் முக்கியத்துவம் என்ன? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விடைகொண்டு வருகிறது இந்த சத்குரு தரிசன ஆடியோ பதிவு!

 Secret of Success | வெற்றியின் ரகசியம் | File Type: audio/mpeg | Duration: 314

"எல்லாவற்றிலும் நானே சிறந்து விளங்க வேண்டும்" என்று முனைபவரா நீங்கள்?. அதற்காக பல உத்திகளைக் கையாண்டு கொண்டு இருக்கிறீர்களா? இதற்காக யாருடைய ஒத்துழைப்பும் உங்களுக்கு கிடைப்பதில்லையா? அந்த நோக்கத்தில் என்ன செய்தாலும் உங்களுக்கு வெற்றி வாய்ப்பதில்லையா? இந்த கேள்விகளுக்கு உங்களுடைய பதில் "ஆம்" என்றால், முதலில் இந்த ஆடியோவை கேளுங்கள். இதில் வெற்றியின் இலக்கணம் வகுக்கப்பட்டுள்ளது..

 இசை மூலம் தியானம் சாத்தியமா? | Is Meditation Possible Through Music? | File Type: audio/mpeg | Duration: 271

Sadhguru answers if meditation is possible through listening to music. பிரபல கடம் இசைக் கலைஞர் திரு. விக்கு விநாயக் ராம், தான் கடம் வாசிக்கும்போது, ஒருசில கணங்கள் தியானத்தை உணர்வதாக சத்குருவிடம் பகிர்ந்துகொள்கிறார். அப்படியானால் உண்மையில் இசையின் மூலம் தியான நிலையை அடைய முடியுமா? இந்தக் கேள்விக்கு விடையாய் அமைகிறது இந்த ஆடியோ.

 Is Fate True? | தலைவிதி என்பது உண்மையா? | File Type: audio/mpeg | Duration: 320

விதி என்னும் ஒரு வார்த்தை நம் துன்பத்திற்கெல்லாம் ஆறுதலாய் இருக்கிறது. பரிட்சையில் தோல்வியா? பதில் "என் விதி," வேலை கிடைக்கலயா? பதில், "என் விதி," சரியான திருமண வாழ்வு அமையலையா? தவறாமல் இங்கும் விதி பதிலாய் நுழைந்துவிடும். அப்படி இந்த விதியை எழுதி வைத்தவர் யார்? நம்மால் இதனை தவிர்க்க இயலுமா? ஆடியோவை கேளுங்கள்...

 காலம் பற்றி அறிந்திடாத ரகசியங்கள் | Unknown Secret About Kaala | File Type: audio/mpeg | Duration: 194

Sadhguru talks about the nature of Kaala and also tells us how to be to understand it. காலம் என்ற தன்மை குறித்து நாம் அறிந்திராத இரகசியங்களை இந்த ஆடியோவில் சத்குரு பேசுகிறார். எத்தகைய தன்மையில் இருப்பவர்களால் காலத்தை உணரமுடியும் என்பதை சத்குரு கூறுகிறார்.

Comments

Login or signup comment.