Sadhguru's Tamil Podcast show

Sadhguru's Tamil Podcast

Summary: Sadhguru, founder of Isha Foundation is a yogi, mystic and spiritual master with a difference. An arresting blend of profundity and pragmatism, his life and work serve as a reminder that inner sciences are not esoteric philosophies from an outdated past, but a contemporary science vitally relevant to our times.

Join Now to Subscribe to this Podcast
  • RSS
  • Artist: Sadhguru Tamil
  • Copyright: Copyright 2020 Sadhguru Tamil

Podcasts:

 ஜாதி-மத கலவரங்களை தடுக்கும் ஒரே வழி! | File Type: audio/mpeg | Duration: 346

சண்டைகளுக்கும் கலவரங்களுக்கும் அவ்வப்போது பற்பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் அவற்றின் வேர் என்னவென்று ஆராய்ந்தால், அவை ஜாதி-மதங்களாகவே இருக்கும். பல்வேறு கலவரங்களையும் பிரச்சனைகளையும் சந்தித்த அனுபவத்தில் காவல்துறை அதிகாரி திரு.நடராஜ் (IPS - Retd) அவர்கள், இவற்றிற்கெல்லாம் தீர்வு என்ன என்றபோது, ஜாதி-மத பிரச்சனைகளை வேரோடு களையக் கூடிய அந்த வழி என்வென்று சத்குரு விளக்குகிறார்.

 இன்னொரு உயிரைக் கொன்று சாப்பிடுவது சரியா? | File Type: audio/mpeg | Duration: 189

இன்னொரு உயிரைக் கொன்று சாப்பிடக் கூடாது என்று சிலர் சொல்கிறார்கள். ஆனால், தாவரங்களுக்கும் உயிர் உள்ளதல்லவா? அப்படியென்றால் சைவ உணவு எப்படி உயர்ந்ததாகும்? சமீபத்தில் மறைந்த தேசிய விருதுபெற்ற திரைப்பட பாடலாசிரியரும் கவிஞருமான திரு.நா.முத்துக்குமார் அவர்கள் ஈஷா யோக மையம் வருகை தந்திருந்தபோது சத்குருவிடம் இதுகுறித்து கேட்டார். சைவ உணவு ஏன் பரிந்துரைக்கப்படுகிறது என்பதை சத்குரு இங்கே விளக்குகிறார்.

 மனித இனம் எப்படி அழியும்? How will this World End? | File Type: audio/mpeg | Duration: 421

கி.பி. 2000 வருடத்தில் உலகம் அழிந்துவிடும் என்று வதந்திகள் பரவின. பின் 2012லும் பரபரப்பாக பேசிக்கொண்டனர். ஆனால், தொடர்ந்து இந்த பூமி இயங்கிக்கொண்டுதான் இருக்கிறது. உலகம் அழியப்போகிறது என்று சொல்வது பற்றி திரைப்பட இயக்குனர் திரு.A.R.முருகதாஸ் அவர்கள், சத்குருவிடம் கேட்டபோது, சத்குரு என்ன கூறினார் என்பதை அறிய, இந்த ஆடியோவை கேளுங்கள்! உண்மையில், மனித இனம் எப்படி அழியப்போகிறது என்பதை சத்குரு விளக்குகிறார்!

 இன்டர்நெட் இருக்க குரு எதற்கு? | Why Is A Guru Needed When There Is Internet? | File Type: audio/mpeg | Duration: 416

நமக்கு வழிகாட்ட குரு அவசியமா? ஒரு சரியான குருவை எப்படி அடையாளம் காண்பது? உங்களை சத்குருவாக ஆக்குவது எது, போன்ற கேள்விகளுக்கு சத்குரு அவர்களின் ஆழமான பதில்களை இந்த ஆடியோவில் கேட்கலாம் 

 குரு பௌர்ணமி நாளின் சிறப்பு என்ன? | File Type: audio/mpeg | Duration: 553

குரு பௌர்ணமி நாளுக்கு அப்படியென்ன சிறப்பு? குரு பௌர்ணமி நாளை ஏன் கொண்டாட வேண்டும்? தட்சிணாயணம் - உத்தராயணம் இடையே உள்ள வித்தியாசங்கள் என்ன?” இந்த அனைத்து கேள்விகளுக்கும் சத்குருவின் வாயிலாக ஆடியோவில் விடை அறியலாம்!

 மனிதனை இயக்குவது கடவுளா? வேற்றுலக சக்தியா | File Type: audio/mpeg | Duration: 436

"என்னை யாராவது வெளியிலிருந்து இயக்குகிறார்களா? அப்படி இயக்குவது கடவுளா? அல்லது வேறு ஏதேனும் ஒரு சக்தியா?" என்று தனக்கே உரிய நகைச்சுவை நடையில் திரு.கிரேஸி மோகன் அவர்கள் சத்குருவிடம் கேட்கிறார். அதற்கு சத்குரு அளிக்கும் பதிலானது, "நான் யார்" என்பதை அறிந்துகொள்ள என்ன செய்ய வேண்டும் என்பதை ஆழமாகவும் தெளிவாகவும் எடுத்துரைப்பதாய் அமைகிறது.

 ஆரோக்கியத்திற்கு ஒரு அலர்ட்! | An Important Health Alert | File Type: audio/mpeg | Duration: 387

நாம் ஆரோக்கியம் பற்றி சிந்திக்க சரியான நேரம் எது, என்பதை சத்குருவின் உரை உணர்த்துகிறது. மேலும், இயற்கையை நம் அனுபவத்தில் உணர்வதற்கு, சத்குரு சொல்லும் வழியையும் தெரிந்துகொள்ள இங்கே சொடுக்குங்கள்!

 புதுசுன்னா பயம் ஏன்? Why fear? | File Type: audio/mpeg | Duration: 338

"உனக்கு நெஞ்சுல கொஞ்சமாவது பயம் இருக்கா? எத செஞ்சாலும் பய-பக்தியோடு செய்!" இப்படி அதட்டி அறிவுரை கூறும் அப்பாக்களை அன்றாடம் பார்க்கிறோம். உண்மையில், பயப்படுவது நல்ல விஷயமா? பய-பக்தியோடு இருக்க முடியுமா? ஆடியோவில் சத்குருவின் விளக்கம் விடை தருகிறது.

 தீவிரம் குறையாமல் இருப்பது எப்படி? How to Stay intense? | File Type: audio/mpeg | Duration: 429

ஈடா பிங்காளா நாடிகளை சமநிலையில் வைத்து தீவிரம் குறையாமல் இருப்பது எப்படி என்று சத்குரு விளக்குகிறார்.

 தியானலிங்கம் - நீங்கள் அறிந்திடாத 5 உண்மைகள் | Dhyanalinga | File Type: audio/mpeg | Duration: 206

மூன்று ஜென்மங்களின் ஒரே நோக்கமாக இருந்துவந்த தியானலிங்கம், சத்குருவின் கடும் சாதனாவினாலும் பிரயத்தனத்தினாலும் இன்று நம் முன்னே உயிருள்ள ஒரு குருவாக நிதர்சனமாய் வீற்றிருக்கிறது. இந்த ஆடியோ மற்ற லிங்கங்களிலிருந்து தியானலிங்கம் எவ்வகையில் தனித்துவம்பெற்று விளங்குகிறது என்பதை விளக்குவதாக அமைகிறது.What are the most important things to know about Dhyanalinga? This audio explains the 5 most important facts about Dhyanalinga.

 மொட்டை போடுவதன் விஞ்ஞானம் என்ன? What is the science behind Tonsure? | File Type: audio/mpeg | Duration: 336

குழந்தை பிறந்தவுடன் ஒருசில மாதங்களில் மொட்டை எடுப்பது நம் கலாச்சாரத்தில் முக்கியமான ஒரு சடங்காக பார்க்கப்படுகிறது. அதோடு, வேண்டுதல்கள் நிறைவேறும் பொருட்டும் பலர் முடியை காணிக்கையாக செலுத்தி, மொட்டை அடிக்கின்றனர். எழுத்தாளர்கள் சுபா இதுகுறித்து கேட்டபோது, இதற்குப் பின்னாலுள்ள ஆழமான விஞ்ஞானத்தை சத்குரு விளக்குகிறார்.

 திறமைமிக்க பிரபல கலைஞர்கள் சொந்த வாழ்வில் தோற்பதற்கு காரணம்..? | Why Successful people fail in personal life? | File Type: audio/mpeg | Duration: 408

உலகப்புகழ் பெற்ற பல பிரபலங்களின் சொந்த வாழ்க்கையை பார்த்தோமானால், பெரும்பாலும் சோகமும் துன்பமுமே நிறைந்துள்ளது. வெளியில் வெற்றி, தனிப்பட்ட வாழ்வில் தோல்வி... ஏன் இந்த முரண்? இதற்குப் பின்னாலுள்ள உளவியலையும், அதற்கான தீர்வையும் தெரிந்துகொள்ள ஆடியோவை கேளுங்கள் 

 பயம் போவதற்கு விபூதி-குங்குமம் வைப்பது தீர்வா? | Does Vibhuthi or Kumkum Dispel Fear? | File Type: audio/mpeg | Duration: 454

விபூதி-குங்குமம் வைத்துக்கொண்டால் மனபயம் அகன்று விடும் என்று சொல்லி பாட்டிமார்கள் பூசிவிடுவார்கள். இது மருத்துவத்தில் சொல்லப்படும் placebo effect போன்றதா? கிரேஸி மோகன் அவர்களின் சுவாரஸ்ய கேள்விக்கு பதிலளிக்கையில் இதுகுறித்து விரிவாக பேசுகிறார் சத்குரு!

 பக்தி... ஏன், எதற்கு? | Why Devotion | File Type: audio/mpeg | Duration: 362

பத்திரிக்கையாளரும் எழுத்தாளருமான திரு.மாலன் அவர்கள் பக்தி குறித்து சத்குருவின் கருத்தை கேட்க விளைந்தபோது, பக்தி என்பது உண்மையில் என்ன என்பதை விளக்குகிறார் சத்குரு; பிரபஞ்சத்தின் பல சூட்சும கதவுகளை திறக்கும் கருவியாக பக்தி இருப்பதையும் இதில் தெளிவுபடுத்துகிறார்!

 கால் தாண்டி போனா என்ன பிரச்சனை? Why Should We Not Cross Someone's Legs While Walking? Sadhguru Tamil | File Type: audio/mpeg | Duration: 437

"யாரது காலையும் தாண்ட கூடாது என்று பெரியவர்கள் சொல்வார்களே இது எதனால்?” என்ற கேள்விக்கு, சத்குரு அவர்கள் தமது பாணியில் சிறப்பான ஒரு பதிலை வழங்குகிறார்.

Comments

Login or signup comment.