Sadhguru's Tamil Podcast show

Sadhguru's Tamil Podcast

Summary: Sadhguru, founder of Isha Foundation is a yogi, mystic and spiritual master with a difference. An arresting blend of profundity and pragmatism, his life and work serve as a reminder that inner sciences are not esoteric philosophies from an outdated past, but a contemporary science vitally relevant to our times.

Join Now to Subscribe to this Podcast
  • RSS
  • Artist: Sadhguru Tamil
  • Copyright: Copyright 2020 Sadhguru Tamil

Podcasts:

 அறிவியல் வளர்ச்சி ஆன்மீகத்திற்கு தடையாகுமா? | File Type: audio/mpeg | Duration: 290

சைவ தமிழ் பேராசிரியர் முனைவர் திரு.செல்வகணபதி அவர்கள், மேலை நாடுகளில் ஆன்மீக தேடுதல் குறைந்து வருவதற்கு அங்குள்ள அறிவியல் வளர்ச்சியும் பொருளாதார வசதி வாய்ப்பும்தான் காரணமா என ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குருவிடம் கேட்கிறார். அதற்கு சத்குரு கூறிய பதில் இந்த ஆடியோவில் 

 எதைச் செய்தால் வியாபாரத்தில் வெற்றி பெறலாம்? | File Type: audio/mpeg | Duration: 167

பிரபல திரைப்பட இயக்குநர் திரு.வஸந்த் அவர்கள் தொழிலில் வெற்றிபெற நினைப்பவர்களுக்காக சத்குரு சொல்லும் ஒரு யோசனை என்ன எனக் கேட்டபோது, ஒருவரின் தொழில் வளர்ச்சி எதைப் பொறுத்து அமையும் என்பதை தெள்ளத் தெளிவாக்கும் சத்குரு, எதைச் செய்தால் வியாபாரத்தில் வெற்றி பெறலாம் என்பதையும் புரியவைக்கிறார்.

 கொரோனா எப்ப முடிவுக்கு வரும்? | When Will Coronavirus Pandemic End? | File Type: audio/mpeg | Duration: 461

கொரோனா இரண்டாம் அலை மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்திக் கொண்டு இருக்கிறது. இந்த கொரோனா பெருந்தொற்று எப்போது முடியும்? இந்நேரத்தில் நம் வாழ்க்கைக்கு நாம் எப்படி திட்டமிட வேண்டும் என்ற கேள்விகளுக்கு சத்குரு அவர்களின் பதிலை இந்த ஆடியோவில் கேட்கலாம்.

 எப்படி வழிபாடு செய்தால் பலன் கிடைக்கும்? | What Is The Proper Way To Worship? | File Type: audio/mpeg | Duration: 434

கடவுள் வழிபாடு செய்வது குறித்த தவறான புரிதலைக் களைந்து, உருவ வழிபாடு உருவாக்கப்பட்டதற்கான காரணத்தை சத்குரு விவரிக்கிறார்!Sadhguru talks about how proper worship should be.

 பயம் ஏன் வருகிறது? எப்படி தடுப்பது? One Main Reason Why We Fear | File Type: audio/mpeg | Duration: 315

'அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்!' என்ற பழமொழி பய உணர்வினால் ஒருவரின் கண்ணோட்டம் முழுவதுமே தவறாகிவிடுவதைக் காட்டுகிறது. பெரும்பாலானோருக்கு பயம் வாழ்க்கையின் வெற்றிக்கும், உடல் ஆரோக்கியத்திற்கும், மனதின் சமநிலைக்கும் பெரும்சவாலாக உள்ளது. இந்த பயம் ஏன் வருகிறது என்பதை தெளிவுபடுத்துகிறார் சத்குரு!

 நீண்ட ஆயுள் பெற எப்படி சுவாசிக்க வேண்டும்? | How To Breathe To Live A Long Life? | File Type: audio/mpeg | Duration: 485

நீண்ட ஆயுளுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ வேண்டுமென்ற நோக்கம் மனிதர்களுக்கு இருந்தாலும், அதற்கு எதிர்மாறாக, இளம் வயதிலேயே சர்க்கரை வியாதி, இரத்த அழுத்தம் போன்ற நாட்பட்ட நோய்கள் வருவதும் அதிகரித்துள்ளன. மனிதன் ஆயுளை நீட்டி, ஆரோக்கியமாய் வாழ்வதற்கான வழிமுறை பற்றி சத்குரு இந்த ஆடியோவில் பேசுகிறார்.

 பேசாமலிருக்கும் ஞானிகளால் என்ன பயன்? | File Type: audio/mpeg | Duration: 219

"ஞானிகள் என்றாலே அதிகம் பேசமாட்டார்கள்; மௌனமாகவே இருப்பார்கள் என்று பொதுவாக ஒரு கருத்துண்டு. அப்படி அவர்கள் பேசாமல் இருப்பதால் என்ன பயன்?" திரைப்பட இயக்குனரும் நடிகருமான திரு.பார்த்திபன் அவர்கள் சத்குருவிடம் இப்படிக் கேட்டபோது, சத்குரு அளித்த சுவாரஸ்ய பதிலை இந்த ஆடியோவில் கேட்கலாம்!

 How to Overcome Suffering & Anxiety? | File Type: audio/mpeg | Duration: 364

Do this for 20 minutes everyday to overcome anxiety and suffering.ஆனந்தமான வாழ்க்கை வாழ்வதற்கு அனைவருக்கும் ஆசைதான்! ஆனால், வீட்டில் மனைவி மாமியார் குழந்தைகள் என ஒவ்வொருவரையும் புரிந்துகொண்டு வாழ்க்கையை நடத்துவதென்பது பலருக்கும் பெரும் சிக்கலாகவே உள்ளது. நம் கிரகிக்கும் தன்மையை அதிகரித்து ஆனந்தமாய் வாழ்வதற்கு சத்குரு சொல்லும் ஒரு வழி, இந்த ஆடியோவில்!#Suffering​ #Anxiety​

 வெள்ளிக்கிழமை - ஏன் இவ்வளவு சிறப்பு? | What Is The Significance of Friday? | File Type: audio/mpeg | Duration: 444

வாரத்தின் ஏழு கிழமைகளுக்கும் நம் கலாச்சாரத்தில் முக்கியத்துவம் கொடுத்து வருவது காலங்காலமாக நடந்தே வருகிறது. அதிலும் குறிப்பாக வெள்ளிக்கிழமையை மங்களகரமான நாளாக வைத்துள்ளோம். இதன் காரணத்தை ஈஷா சத்குருவிடம் ஒருவர் கேட்க, "வாரத்தின் ஏழு நாட்கள் உருவான விதம், அமாவாசை - பௌர்ணமியின் பின்புலன்கள்" இவற்றை இந்த ஆடியோவில் தெளிவுபடுத்துகிறார் சத்குரு.

 ஏன் சிவன் பாதி பெண்ணாக மாறினார்? | Why Did Shiva Become Half-Woman? | File Type: audio/mpeg | Duration: 551

சிவனின் நேரடி சீடரும், பக்தருமான ப்ருகு முனியின் கதையை சத்குரு விவரிக்கிறார். சிவன் அர்தநாரியாகி, மாதொரு பாகனாக அவருக்கு காட்சி அளித்தார். ஒரு முழுமையான உயிராக ஆவதற்கு, ஒருவர் தனக்குள் இருக்கும் ஆண்தன்மையையும் பெண்தன்மையையும் சரிசமமாக வளர்ப்பதன் முக்கியத்துவத்தை பற்றியும் பேசுகிறார்.

 தமிழகத்தில் மஹாசமாதி அடைந்த திருமகள், விஜி | Vijji - The One Who Attained Mahasamadhi At Tamil Nadu | File Type: audio/mpeg | Duration: 961

சித்தர்கள் மஹாசமாதி அடைந்தார்கள், மஹாசமாதி நிலையை அடைவதற்காக பிரயதனப்பட்டார்கள் என்று நாம் தமிழ் சுவடுகளில் படித்திருப்போம். ஆனால், நம்மை போன்ற ஒருவர், இல்லற வாழ்வில் வாழ்ந்தவர், இல்லத்தரசி - மேன்மையாய் மஹாசமாதி அடைந்த உண்மை தெரியுமா உங்களுக்கு? அதுவும் தமிழகத்தில். விஜி‌ - இன்று ஆன்மீகப் பாதையில் இருப்போர் பலருக்கும் ஊக்கசக்தியாய், பாமரர்களுக்கும் இந்நிலை சாத்தியம் என்பதை உணரவைத்து, மாபெரும் யோக நிலையை சுலபமாய் அடைந்திருக்கிறார்.வெற்றித் திருமகள் விஜியின்‌ வெற்றிப் பயணத்தை சித்தரிக்கும் ஆடியோ இது.

 அர்த்தநாரீஸ்வரர் என்ற நிலை எதைக் குறிக்கிறது? | Significance Of Arthanareeswarar | Shiva | File Type: audio/mpeg | Duration: 363

சிலப்பதிகாரத்தில் சோம-சூரிய குண்டங்கள் இருந்துள்ள வரலாற்றை சத்குருவிடம் கூறி, ஈஷாவிலுள்ள சூரிய-சந்திர குண்டங்கள் பற்றிக் கேட்கிறார் சைவ தமிழ் பேராசிரியர் முனைவர் திரு.செல்வகணபதி அவர்கள். அதற்கு பதிலளிக்கையில், ஆண்-பெண் தன்மை குறித்தும், இரண்டு தன்மைக்குமிடையே உள்ள நுட்பமான இடைவெளி குறித்தும் விளக்கும் சத்குரு, அர்த்தநாரீஸ்வரர் என்ற நிலை எதைக் குறிக்கிறது என்பதையும் தெளிவுபடுத்துகிறார்

 Will Dreams in Sleep Come True? | தூக்கத்தில் வரும் கனவு பலிக்குமா? | File Type: audio/mpeg | Duration: 357

தூக்கத்தில் வரும் கனவு பலிக்குமா? - Rare & Unseen Talk | Will Dreams in Sleep Come True? | Sadhguru

 அமைதிக்கு எது வழி? - சத்குரு | When will silence happen? | File Type: audio/mpeg | Duration: 440

அமைதியும் நிசப்தமும் வாயை மூடிக்கொள்வதினால் மட்டுமே கிடைத்துவிடுமென நீங்கள் நினைத்தால் சத்குருவின் இந்த உரை உங்களுக்கு உண்மையை உண்ர்த்துவதாய் இருக்கும். நமது தலை, குப்பைகளால் நிறைந்துள்ளபோது அமைதியாய் இருப்பது நல்லது என்ற கருத்தை சத்குரு, அழகான அந்தப் பறவைக்கதை மூலம் விளக்குகிறார்.

 சொல்லிக்கொடுத்தால் பக்தி வருமா? | Can Devotion be Taught? | File Type: audio/mpeg | Duration: 282

சொல்லிக்கொடுத்தால் பக்தி வருமென்றால் அனைவரையும் உட்கார வைத்து சொல்லிக்கொடுத்துவிடலாம். வெறும் பேச்சளவில் சிலர் பக்தியாக இருக்கிறார்கள். சிலர் உண்மையான பக்தி கொண்டிருக்கிறார்கள். பக்தி எப்போது உண்டாகிறது? குருபக்தி பற்றி சத்குருவிடம் கேட்டபோது....

Comments

Login or signup comment.