Focus: Tamil Nadu/India




Tamil show

Summary: Raj, our correspondent in India, compiled a report focusing on major events/news in Tamil Nadu / India.   (தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்காக ஆதரவாக நடைபெற்று வரும் போராட்டங்கள் தீவிரமடைந்து உள்ளது. ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் குரல் எழுப்பி வந்தாலும், இந்த வருடம் தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக களத்தில் இறங்கி உள்ளது போராட்டத்தின் போக்கை மாற்றி உள்ளது. சென்னை மெரினா கடற்கரை மற்றும் போராட்டத்தின் மைய புள்ளியான அலங்காநல்லூரில் மூன்றாவது நாளாக ஆயிரக்கணக்கான மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பெரு நகரங்களில் மட்டும் அல்லாமல் தமிழகம் முழுவதும் உள்ள சிறு சிறு நகரங்களில் கூட மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.   தமிழ்நாட்டின் முக்கிய நிகழ்வு மற்றும் செய்தியைத் தொகுத்து பார்வைகள் நிகழ்ச்சியாக்கி முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ் அவர்கள். )