Focus: Tamil Nadu




Tamil show

Summary: Raj, our correspondent in Tamil Nadu, compiled this report. (தமிழகம் முழுவதும் கடந்த ஒரு வாரமாக நடந்து வரும் தொடர் போராட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழக அரசு அவசரச் சட்டம் பிறப்பித்துள்ளது. ஆனாலும் அதை ஏற்காமல் தமிழகத்தின் பல பகுதிகளில் போராட்டம் தொடர்கிறது. நிரந்தரமாக சட்டம் இயற்றும் வரை ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த விடமாட்டோம் எனக்கூறி போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர் பொது மக்கள் மற்றும் இளைஞர்கள். அலங்காநல்லூர், சென்னை மெரினா கடற்கரை, புதுச்சேரி மற்றும் தமிழகத்தின் பல நகரங்களில் நிரந்தர சட்டம் வேண்டி தொடர் போராட்டங்கள் நடை பெற்று வருகிறது.   அலங்காநல்லூரில் அரசு சார்பில் ஜல்லிக்கட்டு நடத்த அரசு ஏற்பாடு செய்து இருந்தது. ஜல்லிக்கட்டு நிரந்தர சட்டம் கோரி போராடுபவர்கள் முதல்-அமைச்சர் பன்னீர் செல்வம் அலங்காநல்லூருக்குள் செல்ல அனுமதிக்கவில்லை. இதனால் ஜல்லிக்கட்டு போட்டிகளை தொடங்கி வைக்காமல் திரும்பி சென்றார் தமிழக முதலமைச்சர். ஆனாலும் தமிழகத்தின் சில இடங்களில் ஜல்லி கட்டு போட்டிகள் நடைபெற்றன. நிரந்தரமாக சட்டம் இயற்றப்பட சாத்தியமா? கூடுதல் விவரங்களுடன் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.)