Sadhguru's Tamil Podcast show

Sadhguru's Tamil Podcast

Summary: Sadhguru, founder of Isha Foundation is a yogi, mystic and spiritual master with a difference. An arresting blend of profundity and pragmatism, his life and work serve as a reminder that inner sciences are not esoteric philosophies from an outdated past, but a contemporary science vitally relevant to our times.

Join Now to Subscribe to this Podcast
  • RSS
  • Artist: Sadhguru Tamil
  • Copyright: Copyright 2020 Sadhguru Tamil

Podcasts:

 உறவுகள் சுமையா? | File Type: audio/mpeg | Duration: 456

இங்கே உறவுச் சிக்கல்களுக்கும் பஞ்சமில்லை. "கஷ்டப்படுத்தும் இந்த உறவுகளை என்ன செய்வது?" சத்குரு அவர்களிடம், இப்படி ஒருவர் கேட்டபோது, சத்குரு கூறிய சுவாரஸ்ய பதிலை, இந்த ஆடியோ பதிவில் காணலாம்.

 அசைவம் சாப்பிடாதவர்கள் வாழ்க்கையை அனுபவிக்காதவர்களா? | File Type: audio/mpeg | Duration: 387

பொதுவாக, அசைவ உணவு வகைகள் (NonVeg) மிகவும் ருசியானது என்றும், சைவ உணவுகளை (Veg) மட்டுமே சாப்பிடுபவர்களெல்லாம் வாழ்க்கையை அனுபவிப்பதில்லை என்றும் மக்களிடையே கருத்துக்கள் நிலவுகின்றன! சைவ உணவு பழக்கமுள்ள திரு.பாலா இதுகுறித்து தான் எதிர்கொள்ளும் விமர்சனங்களை சத்குருவிடம் கூறுகிறார். இதற்கு பதிலளிக்கையில் உணவு, ருசி, ஆரோக்கியம் குறித்து நாம் கவனிக்க வேண்டியவற்றை தெளிவுபடுத்துகிறார் சத்குரு!

 திருமணமான தம்பதிகள் ருத்ராட்சம் அணியலாமா? | File Type: audio/mpeg | Duration: 438

ருத்ராட்சம் என்றாலே பிரம்மச்சாரிகளுக்கானது என்ற எண்ணம் மக்களிடையே இருக்கிறது. திருமணத்திற்குப் பின் ருத்ராட்சம் போன்ற ஆன்மீக வாய்ப்புகள் மறுக்கப்படுவது மட்டுமல்லாமல், சிலர் வாழ்க்கையே முடிந்துவிட்டதாகவும் நினைத்துக்கொள்கிறார்கள். ருத்ராட்சம் அணிவது பற்றிய கேள்விக்கு சத்குருவின் பதில்.

 பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படாமல் இருப்பது ஏன்? | File Type: audio/mpeg | Duration: 207

‘ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை காணென்று கும்மியடி!’ என்று பாரதி அன்றே பாடியிருந்தாலும், பெண்களைப் பொறுத்த வரையில் தாங்கள் ஆண்களுக்கு கீழ், இரண்டாம்பட்சமாகவே பார்க்கப்படுவதாக உணர்கிறார்கள். சமூகத்தில் ஏன் இந்த நிலை? இந்நிலை மாற அனைவரும் புரிந்துகொள்ள வேண்டியது என்ன? சத்குருவின் பதில் ஆடியோவில்!

 ஓடும் மனதை நிறுத்துவது எப்படி? | How To Stop Mind Chatter? | File Type: audio/mpeg | Duration: 461

மனதில் நிற்காமல் ஓடிக்கொண்டிருக்கும் எண்ணங்களை நிறுத்த வேண்டுமென்ற ஆவல் தியானம் செய்பவர்களிடத்தில் பரவலாக இருக்கிறது. எண்ணங்கள் இல்லாத நிலையை எய்திய பின்புதான் தியானம் சாத்தியமாகும் என்ற பார்வையை மாற்றும் விதமாக சத்குருவின் இந்த உரை அமைகிறது.

 மரண வீட்டிற்கு சென்று வந்தவுடன் குளிப்பது ஏன்? | File Type: audio/mpeg | Duration: 419

மரணம் தொடர்பான பல்வேறு சடங்குகள் நம் கலாச்சாரத்தில் கடைப்பிடிக்கப்பட்டு வந்தாலும், பலவற்றிற்கு அதன் பின்னாலுள்ள காரணங்கள் தெரிவதில்லை. ‘மரண வீட்டிற்கு சென்று வந்தபின்னர் குளிக்க வேண்டும்’ என்ற வழக்கத்தின் காரணத்தை எழுத்தாளர்கள் சுபா கேட்டபோது, சத்குரு அதன் சூட்சும பின்னணி என்ன என்பதை விளக்குகிறார்.

 தியானம் மனதை மென்மையாக்குவதற்கா? | File Type: audio/mpeg | Duration: 205

கண்கள் மூடி அமர்ந்துவிட்டாலே தியானம்தான் நிகழ்கிறது என்ற பொதுவான பார்வை உள்ளது. அதுபோல தியானம் மனதை செம்மைப்படுத்தும், மென்மைப்படுத்தும் போன்ற பற்பல கருத்துக்களும் உலாவருகின்றன. ஆனால், தியானம் என்பது உண்மையில் என்ன என்பதை பத்திரிக்கையாளரும் எழுத்தாளருமான திரு.மாலன் அவர்கள் எழுப்பிய வினாவிற்கு பதிலளிக்கையில் சத்குரு புரியவைக்கிறார்!

 தலைவனாக இருப்பது எப்படி? | File Type: audio/mpeg | Duration: 340

"'சொன்ன பேச்சைக் கேளு' என்று பெற்றோர்களால் அதட்டி வளர்க்கப்படும் குழந்தை, எப்படித் தலைவனாக வளரும்?!" ஆடியோவில் , நம் புத்தியில் உறைக்கும்படி இந்தக் கேள்வியைக் கேட்கும் சத்குரு அவர்கள், வெள்ளையர்களிடம் அடிமையாய் இருந்து பழகிவிட்ட நாம், இன்னும் தலைநிமிராத அவலத்தையும் சாடுகிறார். நல்ல தலைவனை உருவாக்குவதற்கு ஈஷா மேற்கொள்ளும் முயற்சிகள் என்ன என்பதையும் ஆடியோவில் கேட்கலாம்!

 கடவுள் இருக்கிறாரா? இல்லையா? | Does God Exist | File Type: audio/mpeg | Duration: 320

கடவுளைப் பற்றி ஒவ்வொருவரும் தங்களது சுய அபிப்ராயங்களைக் கொண்டுள்ளனர். கடவுளின் நிறம் என்ன?; ஆணா அல்லது பெண்ணா? இப்படி கடவுளைப்பற்றி அனைத்து கேள்விகளுக்கும் ஒரு பதில் வைத்துள்ளனர். ஆனால், இவர்களால் ஏன் இன்னும் கடவுளை அறிய முடியவில்லை? ஒரு மனிதனுக்குள் கடவுள் தேடல் எப்போது துவங்குகிறது? இப்படி அடுக்கடுக்கான கேள்விகள் நமக்குள் எழுகின்றன. ஆடியோவில் சத்குருவின் இந்த பதில், அனைத்து கேள்விகளுக்கும் விடை சொல்கிறது.

 சத்துமிக்க பல தாவர வகைகள் எப்படி அழிந்தன? | File Type: audio/mpeg | Duration: 236

முன்னணி திரைப்பட இயக்குநர் திரு.ஏ.ஆர்.முருகதாஸ் அவர்கள் அழிந்துவிட்ட பல்வேறு பருப்பு வகைகள் குறித்து சத்குரு முன்பு பேசியதை நினைவுகூர்ந்து அதுகுறித்து கேள்வியெழுப்புகிறார். பல சத்துமிக்க பருப்பு மற்றும் கீரை வகைகள் எப்படி அழிந்தன என்பதை சத்குரு விளக்குகிறார்!

 கோவில்கள் எதற்காக கட்டப்பட்டன? | Why Is Temples Needed? | File Type: audio/mpeg | Duration: 320

"பிரசித்தி பெற்ற பல கோயில்களில் சித்தர்களின் சமாதிகள் உள்ளன. இதைப் பற்றிக் கொஞ்சம் சொல்ல முடியுமா சத்குரு?" என மரபின் மைந்தன் முத்தையா அவர்கள் கேட்க, நம் கலாச்சாரத்தில் கோயில்கள் எதற்காக உருவாக்கப்பட்டன என்பதையும், தற்போது கோயில்கள் எப்படி மாறிவிட்டன என்பதையும் தனக்கே உரிய நுட்பத்துடன் சத்குரு ஆடியோவில் விளக்குகிறார்.

 கடவுள் நம்மை சோதிப்பவரா? | Does God Test Our Faith? | File Type: audio/mpeg | Duration: 222

வாழ்க்கையில் தோல்வி வரும்போதெல்லாம், "நம்மை மட்டும் கடவுள் ஏன் இப்படி சோதிக்கிறார்?" என்ற புலம்பும் மக்கள் ஏராளம். அப்படி உண்மையிலேயே கடவுள் நம்மை சோதிக்கத்தான் செய்கிறாரா? இதற்கு சத்குரு சொல்லும் பதிலென்ன? பேராசிரியர் திரு கு.ஞானசம்பந்தன் அவர்களுடனான இந்த உரையாடலில்  சத்குரு அவர்கள் தரும் விளக்கம் இந்த ஆடியோவில் .

 வெற்றியின் ரகசியம் திறமையா, அதிர்ஷ்டமா? | Success comes by luck or Hard work? | File Type: audio/mpeg | Duration: 358

"நமக்கு அதிர்ஷ்டம் இல்லப்பா...!" என்று அலுத்துக்கொள்ளும் பலரை அன்றாட வாழ்வில் கடந்து செல்கிறோம். "என்னதான் திறமை இருந்தாலும் அதிர்ஷ்டம் வேணும்" என்று சால்ஜாப்பு சொல்லும் அவர்கள், திறமைசாலிகளா, விடாமுயற்சி உடையவர்களா என்று பார்த்தால், நிச்சயம் அப்படியிருப்பதில்லை. சரி! அதிர்ஷ்டம் என்ற ஒன்று உணடா? இல்லையா? சத்குரு என்ன சொல்கிறார்?! இந்த ஆடியோவில் கேட்கலாம்!

 புகழ் பெறுவதற்காக செயலாற்றுவது தவறா? | File Type: audio/mpeg | Duration: 188

புகழடைவதை விரும்பாதவர்கள் இல்லையென்றே சொல்லலாம்! புகழ்பெறும் நோக்கில் பலரும் பல காரியங்களைச் செய்வதைப் பார்க்கிறோம். புகழைத் தேடி அலையும் இத்தகைய மனிதர்களுக்கு சத்குரு சொல்வது என்ன? இந்தக் கேள்வியை பிரபல திரைப்பட இயக்குனர் திரு.வசந்த் அவர்கள் சத்குருவிடம் கேட்க, சத்குரு கூறிய பதில் இந்த ஆடியோவில்!

 எந்த வயசில் உண்மையான காதல்? Right Age for Love? | File Type: audio/mpeg | Duration: 335

"காதல் திருமணம் நல்லதா? அரேஞ்டு மேரேஜ் நல்லதா?" என்று பாரத் மேட்ரிமோனி நிறுவனர் திரு. முருகவேல் ஜானகிராமன் அவர்கள் கேட்க, காதல் பற்றியும் திருமணம் பற்றியும் சத்குரு அவர்கள் கூறும் பதில் சற்றே நம்மை சிந்திக்க வைக்கின்றன!

Comments

Login or signup comment.